யூடிஸ் ஃபோரம் அறக்கட்டளையானது மாற்றுத்திறனாளிகளுக்காக கடந்த ஏழு ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறது. இந்த அமைப்பின் புதிய அறங்காவலர்களாக மாற்றுத்திறனாளிகளும், மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் பெற்றோர்களும் பொறுப்பேற்றனர். பிஷப் அப்பாசாமி கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழச்சிக்கு கல்லூரி முதல்வர் ஜெமிமா வின்ஸ்டன் அவர்கள் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியின் முக்கிய விருந்தினராக பன்னாட்டு பார்வையற்ற குழந்தைகளுக்கான கல்வி கழகத்தின் செயல் தலைவர் டாக்டர் எம்.என்.ஜி. மணி கலந்து கொண்டார். முன்னாள் உளவுத் துறை இணை இயக்குநர் சுப்பிரமணிய சிவா வரவேற்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் யூடிஸ் ஃபோரம் அமைப்பின் புதிய முதன்மை நிர்வாக அறங்காவலராக சூர்ய.நாகப்பன் பொறுப்பேற்றார். மேலும் சந்திரகுமார், சிவசாமி ஆகிய மாற்றுத்திறனாளிகளும், ஷான்பரித், ஜான்சன் ஆகிய பார்வைக் குறைபாடு உடையவர்களும், உஷா விஸ்வேஸ்வரன், சமரசப்பாண்டியன் ஆகிய பெற்றோர் சங்கப் பிரதிநிதிகளும் அறங்காவலர்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
டாக்டர் எம்.என்.ஜி. மணி அவர்கள் தனது சிறப்புறையில் "மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும், அப்பொழுதுதான் அவர்களின் நிர்வாகத் திறமையை இந்த உலகு அறியும், இநத யூடிஸ் அமைப்பின் அறங்காவலர்களாக மாற்றுத்திறனாளிகள் திறமைகாயப் பணியாற்றுவார்கள்" என்று கூறினார்.
விழாவில் பேசிய பிஷப் அப்பாசாமி கல்லூரி முதல்வர் டாக்டர் ஜெமிமா வின்ஸ்டன் அவர்கள் "இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதனும் மனித குலத்திற்கு ஏதேனும் ஒரு சேவை செய்யவே படைக்கப்பட்டிருக்கிறான், அவர்களில் மாற்றுத்திறனாளிகளும் அடங்கியிருக்கிறார்கள்" என்றார்.
புதிய தலைமைப் பொறுப்பேற்றுப் பேசிய சூர்ய.நாகப்பன் அனைத்து மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளையும் பாதுகாக்க, கல்வி, வேலை வாய்ப்பு போன்ற அனைத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய பங்கினைப் பெற்றுத் தர யூடிஸ் அமைப்பு தொடர்ந்து பாடுபடும்" என்று கூறினார்.
நிகழ்ச்சியில் ஆர்விக் ஸ்ரீனிவாசன், ஜெயஸ்ரீ, ரமேஷ், சந்தியா, தமிழ் இனியன், மோகன், திருநாவுக்கரசு, உள்ளிட்டோரும், செவித்திறன் குறைபாடு உடையவர்களின் சங்கப் பிரதிநிதிகளும், மாற்றுத்திறனாளிகளும், மாணவ மாணவியர்களும் கலந்து கொண்டனர். யூடிஸ் அமைப்பின் சேகர் நன்றியுரை கூறினார்.
புகைப்படத்தில்
டாக்டர் எம்.என்.ஜி. மணி அவர்கள் புதிய தலைமைப் பொறுப்பேற்ற சூர்ய.நாகப்பனுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். அவருடன் சந்திரகுமார், ஜான்சன், சமரசப்பாண்டியன், ஷான்பரித்