செவித்திறன் குறைபாடு உடைய மாற்றுதிறனாளிகளுக்கு இலவச மருத்துவ முகாம்
கோவை மேக்(MAK) மருத்துவமனை திருவள்ளுவர் அறக்கட்டளை யூடிஸ் அமைப்பு காலிபர் அறக்கட்டளை இணைந்து செவித்திறன் குறைபாடு உடைய மாற்றுதிறனாளிகளுக்கு இலவச மருத்துவ முகாமை ஏற்பாடு செய்திருந்தனர். மேட்டுபாளையம் சாலை சேரன் நகரில் உள்ள யூடிஸ் அலுவலகத்தில் (14-4-13) காலை 9 மணிக்கு முகாம் துவங்கியது . முகாமை பி.என்.புதூர் - bi mettal நிறுவன மனித வள மேம்பாட்டுத் துறை தலைவர் திரு . பாலதண்டாயுதம் முகாமை துவக்கி வைத்தார். ஹோமியோபதி மருத்துவர் மு.ந.புகழேந்தி(9842224158) செவித்திறன் குறைபாடு உடையவர்களை பரிசோதித்து தகுந்த மருந்துகளை வழங்கினார் . காலிபர் அறக்கட்டளை இயக்குனர் சூர்ய.நாகப்பன், காலிபர் மோகன் ஆகியோர் கலதந்து கொண்டனர். GCT பொறியியல் கல்லூரி மாணவர்கள் தொண்டர்களாக பணியாற்றினர். கோவை , சேலம் , நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் இருந்து பெரும்திரளான செவித்திறன் குறைபாடு உடைய மாற்றுதிரனாளிகள் கலந்து கொண்டனர். முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை ஆண்டு முழுவதும் இலவசமாக மருந்துகள் வழங்கப்படும்.
No comments:
Post a Comment