AMAZING SPECIES

Friday, May 24, 2013

கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் மகளிர் அமைப்புக் கூட்டம் 7-4-2013





கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அமைப்பைச் சேர்ந்த மகளிர் 7/4/2013 அன்று சேரன் நகரில் உளள யூடிஸ் ஃபோரம் அமைபபில் கூடி அவர்களது பிரச்சனைகளை விவாதித்தனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுயதொழில் துவங்கிய, துவங்க உள்ள மாற்றுத்திறனாளி மகளிருக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

மேலும் மாற்றுத்திறன் மகளிர் சந்திக்கும் சமூகப் பிரச்சனைகள், ஜுன் மாதம் பள்ளி திறக்கும் பொழுது வறுமையில் உள்ள மாற்றுத்திறன் மகளிர் அவர்களுது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது, அதற்கான செலவுகளுக்கான உதவிளைப் பெறுவது, அதற்கு பணியில் உள்ள மாற்றுத்திறன் மகளிர் எவ்வாறு உதவுவது என்பது போன்ற விஷயங்களும் விவாதிக்கப்பட்டன.

மேலும் மாற்றுத்திறன் மகளிர்களுக்கு பசுமை வீடுகளில் இடஒதுக்கீடு மற்றும் முன்னுரிமையில் வீடுகள் கட்டித்தர மாவட்ட ஆட்சித் தலைவரி அவரிகளிடம் மனு அளிப்பது என்று முடிவெடுத்தனர்.
இவ்வமைப்பின் தலைவி பாலகிருத்திகா, துணைத் தலைவி மீனா ஆகியோர் மாற்றுததிறனாளி மகளிருக்கு ஆலோசனைகள் வழங்கினர்.

கேலிபர் அமைப்புத் தலைவர் சூர்ய.நகாகப்பன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொணடு சிறப்புரை வழங்கினார்.

No comments: