கேலிபர் பயிற்சி மையம, கோவை மாவட்ட மாற்றுததிறனாளிகள் சங்கம், விவேகம் அறக்கட்டளை இணைந்து மாற்றுத்திறன் மகளிருக்கான சிறப்புக் கூட்டத்தை 8/3/2013 அன்று காந்திபுரம பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளி மகளிரின் உரிமைகளைப் பாதுகாக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது.
மாற்றுத்திறன் மகளிர் அமைப்பின் சார்பாக குமாரி.பாலகிருத்திகா, குமாரி.மீனா ஆகியோரும், கோவை மாவட்ட மாற்றுத்திறன் மகளிர் அமைப்பின் சார்பாக குமாரி.ஹேமா, விவேகம் அறக்கட்டளை நிர்வாகிகள் திரு.விவேகன் பாலாஜி, திருமதி.ஷாலினி பாலாஜி ஆகியோரும் கலந்து கொண்டனர். டாக்டர்.டிம்பிள் அவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளி மகளிருக்கு ஆலோசனை வழங்கினார்.
கேலிபர் அறக்கட்டளை சார்பில் சூர்ய.நாகப்பன் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து வரவேற்புரை நிகழ்த்தினார்.
செவித்திறன் குறைபாடு உடைய மகளிரின் பிரதிநிதியாக திருமதி.ஜெயஸ்ரீ கலந்து கருத்துரை வழங்கினார்.
தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கு.ராமகிருஷ்ணன் அவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாற்றுத்திறன் மகளிருக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.
கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கத் தலைவர் திரு.கன்னியப்பன் நன்றியுரை வழங்கினார்.
No comments:
Post a Comment