AMAZING SPECIES

Wednesday, February 1, 2012

Multi Media July-Dec 2011

யூடிஸ் ஃபோரம் உதவியுடன் கேலிபர் பயிற்சி மையத்தில் ஜூலை-டிசம்பர் 2011ல் மல்டி மீடியா பயிற்சி பெற்ற மாற்றுத்திறனாளிகளில் சிலர் . . .

திரு.பாபுராஜ், திரு.அன்சர்அலி, திரு.பாஸ்கர், குமாரி.லலிதா

திரு.ராஜு, குமாரி. மாலதி

திரு.சங்கர் கணேஷ், திரு.கருப்பசாமி, திரு.நாக பெருமாள்

குமாரி.பத்மினி, திரு.இசக்கி முத்து

திரு.வினோத், திருமதி.நித்யா

திரு.பிரபு, திரு.ஜெயபிரகாஷ்




உணவு . . . உறைவிடம். . . உழைப்பு

சாரதாம்பாள் அறக்கட்டளையும், கேலிபர் அமைப்பும் இணைந்து மாங்க்ரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு தங்குமிடமும் பணியும் வழங்கியது. அதில் பயடைந்த திரு.அடைக்கலராஜ், திரு.அருள், திரு.சுந்தரமூர்த்தி, திரு.சந்தோஷ்

விபத்தில் சிக்கிய மாற்றுத்திறனாளி 12-12-2011

நமது அமைப்பைச் சேர்ந்த தோழர் நந்தகுமார் அவர்கள் சென்ற மூன்று சக்கர மோட்டார் வாகனத்தை கேரளாவைச் சேர்ந்த மகிழுந்து சுந்தராபுரம் அருகில் மோதியது. இதில் படுகாயமடைந்த தோழர் நந்தகுமார் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டார். அவது ஊனமான இடதுகாலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மிகுந்த துன்பத்திற்கு உள்ளானார். கேலிபர் அமைப்பின் தலைவர் சூர்ய நாகப்பன் உட்பட பலர் நேரில் சென்று அவருக்கு ஆறுதல் கூறினர். அவரது வாகனத்தை இயக்க அவருக்கு ஓட்டுநர் உரிமம் இல்லை என்று கூறி அவரது வாகனத்தை வட்டாரப் போக்கு வரத்து அலுவலர் பறிமுதல் செய்து விட்டார்கள். மேலும் எவ்விதமான நட்ட ஈடும் அளிக்க இயலாது என்று விபத்தை ஏற்பபடுத்திய வாகன உரிமையாளரும் கூறிவிட்டார். வேண்டுமென்றால் வழக்கை சந்திக்க தயாராக இருக்கிறேன் என்று இருமாப்பாகப் பேசிச் சென்றுவிட்டார் மோதிய வாகன உரிமையாளர். மாற்றுத்திறனாளிகளால் நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏற இயலாது. . . அவைகள் தடைக்கற்கள்.

மாலை சூடும் மணநாள் . . . மாற்றுத்திறனாளிப் பெண்ணின் வாழ்வில் திருநாள் 11-12-2011



நமது கேலிபர் அமைப்பைச் சேர்ந்த குமாரி.லலிதா என்ற மாற்றுத்திறனாளி பெண் அவரது பள்ளித் தோழரான திரு.பிரபு என்பவரை 11-12-2011 அன்று பெ.தி.க. பொதுச் செயலாளர் திரு.கு.இராமகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் பெரியார் படிப்பகத்தில் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டனர். இம் மணவிழாவில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். மேலும் பல்வேறு சமூக அமைப்புகளைச் சேர்ந்த தோழர்களும், தோழியர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். அனைத்து நாளிதழ்களும் செய்திகளை வெளியிட்டு உதவின. இந்த மணவிழாவிற்கு உதவிய பெ.தி.கழகத்திற்கும், பொதுச் செயலாளர் திரு.கு.இராமகிருஷ்ணன் அவர்களுக்கும் அனைத்து தோழர்களுக்கும் கேலிபர் அமைப்பின் சார்பாக மனமார்ந்த நன்றி.

Self Employment Awareness Prgoramme 1-11-11


ஜெயச்சந்திரன் நலச் சங்கத்தின் மூலமாக மாற்றுத்திறனாளிகளுக்கு சுயவேலை வாய்ப்பை ஏற்படுத்தத் தரும் திட்டத்தின் செய்யப்பட்டு வரும் உதவிகள் பற்றியும், அதற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது பற்றியும் மாற்றுத்திறனாளிகளுக்கு தெளிவாக விளக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் சுமார் 25 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.