AMAZING SPECIES

Sunday, May 4, 2014

Caliber Trust - Placement Photo's

 திருமதி.லதாவுக்கு பணி நியமன ஆணையை வழங்குகிறார் திரு.முகமது நாசர் அவர்கள்

 கோவை வெங்கிட்டாபுரத்தில் உள்ள கேலிபர் மாற்றுத்திறனாளிகள் பயிற்சி மைய்யத்தில் பயிற்சி பெற்று பணி வாய்ப்பு பெற்ற திருமதி.லதா. ஒரு காலை இழந்த இவர் எமது கேலிபர் அமைப்பால் பணி வாய்ப்பு பெற்றுத் தரப்பட்ட 217 மாற்றத்திறனாளி. திருமதி.லதாவுக்கு கோவை காந்திபுரத்தில் உள்ள Concept Engginers என்ற நிறுவனத்தில் 2-5-2014 அன்று பணி நியமன ஆணையை வழங்கினார் அந்நிறுவனத்தின் தலைவர் திரு.முகமது நாசர். அவருக்கு எமது மாற்றுத்திறனாளிகள் அமைப்பு சார்பாக மனமார்ந்த நன்றி.


கோவை வெங்கிட்டாபுரத்தில் உள்ள கேலிபர் மாற்றுத்திறனாளிகள் பயிற்சி மைய்யத்தில் பயிற்சி பெற்று பணி வாய்ப்பு பெற்ற திரு.சுந்தரமூர்த்தி. கோவை, கே.என்.ஜி.புதூரில் இயங்கி வரும் Susin Technologies என்ற MNC நிறுவனத்தில் பணி வாய்ப்பு பெற்றத் தரப்பட்டது. எமது கேலிபர் அமைப்பால் பணி வாய்ப்பு பெற்றுத் தரப்பட்ட 216 மாற்றுத்திறனாளி இவர்.  திரு.சுந்தரமூர்த்திக்கு பணி வாய்ப்பை 2-5-2014 அன்று வழங்கினார் அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திருமதி.சிந்துஜா ஆனந்தன். அவருக்கு எமது மாற்றுத்திறனாளிகள் அமைப்பு சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

No comments: