மரியா பார்வைக்குறைபாடு உடைய கல்லூரி மாணவி. கோவையில் ஒரு தனியார் கல்லூரியில் முதலாமாண்டு தமிழ் இலக்கியம் பயின்று வருபவர். கோவை வெங்கிட்டாபுரம் பகுதியில் இயங்கி வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான யூடிஸ்-கேலிபர் கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தில் கம்ப்யுட்டர் கற்றுக் கொள்வதற்காக வந்து சேர்ந்தார். JAWS மென்பொருள் மூலமாக படிக்க ஆரம்பித்தார். மூன்றே வகுப்புகளில் மொத்தமாக வெறும் ஆறு மணி நேரத்தில் ஆங்கலத் தட்டச்சு முறையாக அனைத்து எழுத்துக்களையும் பயின்று, பிழையில்லாமல் தட்டச்சு செய்து அசத்தினார். நான் எத்தனையோ மாற்றுத்திறனாளிகளுக்குப் பயிற்சி அளித்திருக்கிறேன். இவ்வளவு வேகமாகவும், பிழையில்லாமலும் ஆங்கிலத் தட்டச்சு செய்த பெண்ணாக மரியா மட்டுமே என் நினைவில் இருக்கிறார். பார்வையுடைய பலரும் தட்டச்சு செய்வதில் முறையான பயிற்சி இல்லாமல் தடுமாறிக் கொண்டிருப்பதை நான் பார்த்திருக்கிறேன். நூறு சதவிகிதம் பார்வை இழப்பு இருந்தாலும் மன உறுதியுடன் தட்டச்சு செய்யும் மரியாவே உண்மையான மாற்றுத்திறனாளி. நாளைய உலகையே மாற்றும் திறன் உடையவர். மரியாவை வாழ்த்துவோம்.
மரியா பார்வைக்குறைபாடு உடைய கல்லூரி மாணவி
No comments:
Post a Comment