AMAZING SPECIES

Wednesday, November 6, 2013

மாற்றுத்திறனாளி மகளிருக்கான ஒருநாள் கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி. 27-10-2013







கோவை ‍ேமட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள யூடிஸ் ஃபோரம் அமைப்பு மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் அமைப்பாக கடந்த ஏழு ஆண்டாகப் பணியாற்றி வருகிறது. இவ்வமைப்பு மாற்றுத்திறனாளிகளும், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் பெற்றோர் சங்கமும் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்காக பணியாற்றி வருகிறது.  இவ் அமைப்பில் மாற்றுத்திறனாளி மகளிருக்கு ஒருநாள் கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வழங்கப்பட்டது. மாற்றுத்திறன் மகளிர் வீட்டிலிருந்தே தங்கள் ஓய்வு நேரத்தில் மிக எளிமையாக செய்யும் கைவினைப் பொருட்களைத் தயாரிக்கப் பயிற்சி வழங்கப்பட்டது. இதில் பேஷன் நகைகளைத் தயாரிக்கவும், தெர்மோகோலில் பல்வேறு வடிவங்களைத் தயாரிக்கவும், உபயோகமில்லாத சிடியைக் கொண்டு கலைப் பொருட்களைத் தயாரித்தல் போன்ற கைவினைப் பொருட்களைத் தயாரிக்க பயிற்சி வழங்கப்பட்டது. மாற்றுத்திறன் மகளிருக்கு மாற்றுத்திறன் மகளிரான மீனா, பாலகிருத்திகா பயிற்சிகளை வழங்கினர். திரு.கதிரவன் சிறப்பு பயிற்சியாளராகக் கலந்து கொண்டு பயிற்சிகள் வழங்கினார். 25 மாற்றுத்திறனாளி மகளிர் இப்பயிற்சியில் கலந்து கொண்டு பயனடைந்தனர். யூடிஸ் ஃபோரம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தலைவர் சூர்ய.நாகப்பன் நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். "பயிற்சியளிப்பதோடு ஒதுங்கிவிடாமல் மாற்றுத்திறன் மகளிர் உற்பத்தி செய்த பொருட்களை சந்தைப் படுத்த யூடிஸ் ஃபோரம் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ளும். பார்வையற்றோர் சங்கம், செவித்திறன் குறைபாடு உடையோர் சங்கம், பெற்றோர் சங்கம் ஆகியவற்றை இணைத்து மாற்றுத்திறன் மகளிர் உற்பத்தி செய்த பொருட்களைச் சந்தைப்படுத்த தேவையான முய்ற்சிகளைச் செய்யும்" என்று தனது உரையில் கூறினார்.  நிகழ்ச்சியில் பல மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற மாற்றுத்திறனாளி மகளிருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

No comments: