சென்னையைச் சேர்ந்த சிஸ்ரெஸ்(Sysres Oracle Education) என்னும் நிறுவனத்துடன் இணைந்து ஆனைகட்டி செல்லும் வழியில் உள்ள மாங்கரையில் உள்ள ஆரோக்கிய குடும்பம் (Aarogya Kudumbam) என்னுமிடத்தில், தங்குமிடத்துடன் கூடிய இலவச ஆரக்கிள் பயிற்சியை வழங்க உள்ளோம். இதற்கான ஆசிரியரை சிக்ஸ்த் சென்ஸ் ஃபவுண்டேசன் (Sixth Sense Foundation) என்ற அமைப்பு வழங்கியுள்ளது.
பொறியியல் படிப்பு அல்லது கணினியில் ஒரு பட்டம் அல்லது பட்டயப் படிப்பு முடித்த மாற்றுத்திறனாளிகள் இதற்கு தகுதி உடையவர்கள் ஆவார்கள்.
உணவு, தங்குமிடம், பயிற்சி அனைத்தும் முற்றிலும் இலவசம். இது ஆறு மாதப் பயிற்சி, வார இறுதி நாட்களான சனி, ஞாயிறு மட்டும் இந்தப் பயிற்சிகள் வழங்கப்படும். சிறந்த மாற்றுத்திறனாளிகளுக்கு சிஸ்ரெஸ் நிறுவனமே வேலை வாய்ப்பினையும் பெற்றுதததர உள்ளது,
No comments:
Post a Comment