மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரு ேமாட்டார் பொறுத்தப்பட்ட வண்டி (மூன்று சக்கர மோட்டார் வண்டி) ஒன்றை வடிவமைக்கும் பணியில் எமது கேலிபர் அறக்கட்டளை ஈடுபட்டுள்ளது. தற்பொழுது சந்தையில் கிடைக்கும் மோட்டார் வண்டிகளை விட விலைக் குறைவாகவும், அரசு இலவசமாக வழங்கும் மூன்று சக்கர சைக்கிளை மாற்றி வடிவமைப்பதன் மூலமாக மாற்றுத்திறனாளிகளின் வேலைக்கு செல்லுதல், சுயதொழில் புரியும் இடங்களுக்குச் செல்வதில் உள்ள இடர்பாடுகளை நீக்க முடியும். இவ்வாறான வண்டியை ஒவ்வொரு மாற்றுத்திறனாளியும் பெற்றிருந்தால் அவர்களின் வேலை வாய்ப்பு அதிகரிக்கும், அவர்களின் வருமானம் அதிகரிக்கும். மேலும் மின்கலத்தினால் இயங்கும் இத்தகைய வண்டி சுற்றுச்சூழலையும் பாதிக்காத வகையில் இருக்கும். முதலில் ஒரு வண்டியை உருவாக்குவதற்கு சற்றே அதிகமாக செலவு ஆனாலும், பெரிய அளவில் இத்தகைய வண்டியை உற்பத்தி செய்யும் பொழுது இதன் அடக்கவிலை பெருமளவில் குறையும். ஒரு மாதிரி வண்டியயை உருவாக்க உதவுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தோம். எமது கோரிக்கையை ஏற்று பல நல்ல உள்ளங்கள் உதவி வருகின்றன. இந்தத் திட்டத்திற்கு உதவும் அனைவருக்கும் நன்றி.
No comments:
Post a Comment