
நமது அமைப்பைச் சேர்ந்த தோழர் நந்தகுமார் அவர்கள் சென்ற மூன்று சக்கர மோட்டார் வாகனத்தை கேரளாவைச் சேர்ந்த மகிழுந்து சுந்தராபுரம் அருகில் மோதியது. இதில் படுகாயமடைந்த தோழர் நந்தகுமார் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டார். அவது ஊனமான இடதுகாலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மிகுந்த துன்பத்திற்கு உள்ளானார். கேலிபர் அமைப்பின் தலைவர் சூர்ய நாகப்பன் உட்பட பலர் நேரில் சென்று அவருக்கு ஆறுதல் கூறினர். அவரது வாகனத்தை இயக்க அவருக்கு ஓட்டுநர் உரிமம் இல்லை என்று கூறி அவரது வாகனத்தை வட்டாரப் போக்கு வரத்து அலுவலர் பறிமுதல் செய்து விட்டார்கள். மேலும் எவ்விதமான நட்ட ஈடும் அளிக்க இயலாது என்று விபத்தை ஏற்பபடுத்திய வாகன உரிமையாளரும் கூறிவிட்டார். வேண்டுமென்றால் வழக்கை சந்திக்க தயாராக இருக்கிறேன் என்று இருமாப்பாகப் பேசிச் சென்றுவிட்டார் மோதிய வாகன உரிமையாளர். மாற்றுத்திறனாளிகளால் நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏற இயலாது. . . அவைகள் தடைக்கற்கள்.
No comments:
Post a Comment