AMAZING SPECIES

Saturday, August 20, 2011

25-5-2011 Self Employment for PWDs- Supported By Jayachandran Welfare Association





கேலிபர் அறக்கட்டளையின் மூலமாக மாற்றுத்திறனாளிகளுக்கு சுய வேலை வாய்ப்பு ஏற்பத்தித்தர தொடர்ந்து முயன்று கொண்டிருந்தோம். அதன் பயனாக கோவை ஜெயச்சந்திரன் நலச் சங்கத்தின் மூலமாக எட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு முறையே சரவணம்பட்டி, தண்ணீர்பந்தர், இராமநாதபுரம், சிங்காநல்லூர் ஆகிய இடங்களில் டாய் அன்டு ஜாய் என்ற பெயரில் மென்மையான பொம்மைகள் விற்கும் கடைகளை ஏற்படுத்தித் தந்தார்கள்.



இத் திட்டத்திற்காக ஜெசந்திரன் சமூக நலச் சங்கம் ரூ.40000 வழங்கினார்கள். இத்தொகையை நமது கேலிபர் அறக்கட்டளை மாற்றுத்திறனாளிகளுக்கு பொம்மைகளாக வழங்கியது.

ஜெயச்சந்திரன் நலச் சங்கத்தின் மூலமாக பொம்மைக் கடைக்குத் தேவைப்பட் மேலும் ரூ.40,000 மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்பட்டன.

மேலும் மாற்றுத்திறனாளிகள் தங்குவதற்கு இடிகரை கிராமத்தில் ஒரு வீடும், பொம்‍மைக் கடைக்குத் தேவையான பொருட்களை ஏற்றிச் செல்ல ஒரு சிறிய சரக்குந்தும் அளித்திருந்தனர்.

ஒரு மாதத்திற்கு மாற்றுத்திறனாளிகளுக்கு ஜெயச்சந்திரன் நலச் சங்கத்தின் மூலமாக உணவும் வழங்கப்பட்டது.

திரு.ஈஸ்வரன், திரு.கணேசன், திரு.தீனதயாளன், திரு.மணிகண்டன் ஆகிய பார்வைக் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகளும், திரு.ரமேஷ், திரு.அப்துல்லா, திரு.பரத் ஆகிய கைகால் இயக்கக் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகளும் இணைந்து இந்த பொம்மைக் கடைகளை திறம்பட நடத்தி இலாபமீட்டினர்.

இந்த வாய்ப்பை வழங்கிய ஜெயச்சந்திரன் நலச் சங்கத்திற்கும், அச்சங்கத்தின் நிர்வாகிகளுக்கும், அதன் தலைவர் திரு.பிரதீப் அவர்களுக்கும் கேலிபர் அறக்கட்டளையின் சார்பாகவும், மாற்றுத்திறனாளிகள் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

2 comments:

அன்புள்ளம் said...

Real Effort has it's own reaction. Readiness for that is the realism.

அன்புள்ளம் said...

Real Effort has it's own reaction. Readiness for that is the realism.