மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரு நாள் தொழில் ஊக்குவிப்பு, மற்றும் சுயவேலை வாய்ப்புக்கான கருத்தரங்கு 22/11/2012 அன்று தடாகம் சாலையில் உள்ள யூடிஸ் ஃபோரம் அலுவலகத்தில் காலை 11.30 மணி முதல் மாலை 4 மணிவரை நடைபெற்றது. யூடிஸ் ஃபோரம், கேலிபர் அறக்கட்டளை, சிறு, குறு, மற்றும் நடுத்தர தொழில்களுக்கான நிறுவனமான (MSME) நிறுவனத்துடன் இணைந்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் இந் நிறுவனத்தின் துணை இயக்குநர் திரு.பழனிவேல் அவர்கள், இந்நிறுவனத்தின் துணை இயக்குநர் திரு.விஜயகுமார் அவர்கள், மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக தொழிலதிபரும் ஜெயச்சந்திரன் நலச் சங்கத்தின் தலைவர் திரு.பிரதீப் அவர்களும், யூடிஸ் ஃபோரத்தின் செயல் அலுவலர் திரு.சுப்பிரமணிய சிவா அவர்களும், கோவை கொடீசியாவைச் சேர்ந்த பொறியாளர் திரு.ஜெயகோபால் அவர்களும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் சுமார் முப்பது மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். கண்பார்வை குறைபாடு உடைய நான்கு பேரும், ெசவித்திறன் குறைபாடு உடைய நான்கு பேரும், இருபத்தி இரண்டு கைகால் இயக்கக் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொண்டனர்.
கேலிபர் அறக்கட்டளையின் தலைவர் சூர்ய.நாகப்பன் அனைத்து சிறப்பு அழைப்பாளர்களையும், மாற்றுத்திறனாளிகளையும் வரவேற்றுப பேசினார்.
திரு.சுப்பிரமணிய சிவா அவர்கள் "மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் செய்வதில் மிகச் சிறப்பாக உள்ளனர். மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் கூட அவர்களின் பெற்றோர்களின் உதவியுடன் சுயதொழில் செய்து வருகின்றனர். மாற்றுத்திறனாளிகள் இது போன்ற அரசு நிறுவனங்களின உதவியுடன் பல பயிற்சிகளை மேற்கொண்டு தொழில் முனைவோர்களாக உருவாக வேண்டும்" என்று கூறினார்.
MSME நிறுவனத்தின் துணை இயக்குநர் திரு.விஜயகுமார் அவர்கள் பேசும் பொழுது மத்திய அரசின் PMEGP, திட்டம் பற்றியும், மாநில அரசின் UYEGP திட்டம் பற்றியும், KVIC யின் பணிகள் பற்றியும், மாவட்ட தொழில் மையம் குறித்தும், வங்கிக் கடன்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ள சலுகைகள் பற்றியும விரிவாக எடுத்துரைத்தார். இலவசமாக வழங்கப்படும் தொழில் முனைவோருக்கான பயிற்சி, தொழில் முனைவோர்களின் திறன் மேம்பாட்டுப் பயிற்சி, தங்க நகை மதிப்பீட்டாளர்கள் பயிற்சி போன்ற பல பயிற்சிகளைப் பற்றிய விபரங்களையும் எடுத்துக் கூறினார்.
தொழிலதிபரும் ஜெயச்சந்திரன் நலச் சங்கத்தின் தலைவர் திரு.பிரதீப் அவர்கள் பேசும் பொழுது "மாற்றுத்திறனாளிகள் அனைத்து தொழில்களையும் உற்று நோக்க வேண்டும், ஏதேனும் ஒரு தொழில் செய்ய நினைக்கும் மாற்றுத்திறனாளிகள் அந்தத் தொழிலில் போதிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தெளிவான திட்டத்துடன் இருக்க வேண்டும். விடா முயற்சியுடன், கடின உழைப்பையும் அளித்து தொழிலில் ஈடுபட்டால் கண்டிப்பாக வெற்றி பெற இயலும். ஒரு பட்டாம் பூச்சியின் சிறகசைவு ஒரு சுனாமியை தடுக்கவோ ஏற்படுத்தவோ வல்லமை உடையது என்ற சிந்தனையுடன், மாற்றுத்திறனாளிகள் தங்களைப் பற்றி சுயமதிப்பீடுகளுடன், உயர்ந்த எண்ணங்களுடனும் தொழில் முனைவோராக முன்வரவேண்டும். அவ்வாறு சிறப்பான எண்ணங்களுடனும், தெளிவான தொழில் திட்டத்துடன் ஜெயச்சந்திரன் நலச் சங்கத்தை அணுகும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ காத்திருக்கிறோம்" என்று கூறினார்.
MSME நிறுவனத்தின் துணை இயக்குநர் திரு.பழனிவேல் அவர்கள் பேசும் பொழுது மாற்றுத்திறனாளிகளுக்கென்று தொழில் முனைவோர் குறித்த புதிய திட்டங்கள் வரவேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் வாய்ப்புகள் என்ன, என்ன உள்ளது அவற்றைப் பெறுவது எப்படி, எப்படி திட்ட நகலைத் தயாரிக்க வேண்டும் என்றும், மாற்றுத்திறனாளிகள் எப்படி தங்களை ஒரு தொழில் முனைவோராக உருவாக்குவது என்பது பற்றியும் எடுத்துரைத்தார். மேலும் மாற்றுத்திறனாளிகள் பலரும் தங்கள் சந்தேகங்களைக் கேட்க அவற்றிக்கு விரிவான பதில்களை அளித்தார். சுயதொழில் தொடர்பான அனைத்து சந்தேகங்களையும் தீர்க்க மாற்றுத்திறனாளிகளுக்காக எங்கள் அலுவலகம் எப்பொழுதும் உதவும் என்று வாக்குறுதியளித்தார்.
மதியம் கோவை கொடீசியாவைச் சேர்ந்த பொறியாளர் திரு.ஜெயகோபால் அவர்கள் புதிய புதிய தொழில்கள் குறித்தும், மிகப் பெரிய அளவில் திட்டமிட்டால் மட்டுமே மிகச் சிறிய அளவிலாவது இலக்குகளை அடைய முடியும் என்று கூறினார். மேலும் ஹோட்டல், பேக்கறி, உணவு உற்பத்தி, நறுக்கிய காய்கறிகளை சந்தைப்படுத்தல் போன்ற பல்வேறு புதிய புதிய தொழில்கள் குறித்தும் அதற்குத் தேவையான பல்வேறு தொழில் நுட்பங்கள் குறித்தும் விளக்கினார். மாற்றுத்திறனாளிகள் ஐயங்களைத் தெரிவிக்க அவற்றைத் தீர்க்கும் விதமாக பல்வேறு விளக்கங்களை அளித்தார்.
யூடிஸ் ஃபோரத்தின் ஒருங்கிணைப்பாளர் S.Sekaran நன்றியுரை வழங்கினார்.
|
No comments:
Post a Comment