


பிரம்மரிஷி.கோ.எத்திராஜ்

இயற்கை வாழ்வியல் கலை
சமைத்த உணவை தவிர்த்து பழ உணவுப் பழக்கத்தினை கைக்கொள்வதன் மூலம் எவ்வாறு நோய்களைத் தவிர்க்கவும், வந்த நோய்கள் குணமாகவும், பழ உணவே சிறந்தது. குணப்படுத்தவே இயலாது என்று மருத்துவர்கள் கூறிய நோயளிகளும் உணவுப் பழக்கத்தினை மாற்றி நோயை வென்று வாழ்க்கையை நல்ல முறையில் வாழ்வதை மாற்றுத்திறனாளிகள் அறிந்து கொள்ள ஒரு நாள் பயிற்சிப் பட்டறை 10-4-11 அன்று நடத்தப்பட்டது. இயற்கை வாழ்வியல் கலையின் தந்தை பிரம்மரிஷி.கோ.எத்திராஜ் அவர்கள் இயற்கை உணவே உடல் நலத்திற்கு உறுதுணையானது என்று சிறப்புரையாற்றினார். திருமதி.இரதி லோகநாதன் அவர்கள் தனது இயற்கை உணவு அனுபவத்தைக் கூறினார். மாற்றுத்திறனாளிகளும், பெற்றோர்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர். மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ ஆலோசனையும் வழங்கப்பட்டது.
www.fruitsandrealdiet.blogspot.com
www.natures-food.blogspot.com
www.frutarians.blogspot.com