



கேலிபர் மாற்றத்திறனாளிகள் அமைப்பும் இடையர்பாளையம் திருவள்ளுவர் அறக்கட்டளையும் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான மாற்று மருத்துவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மஸ்குலர் டிஸ்ட்ரோபி என்ற நோய்க்கு மாற்று மருத்துவத்தில் மருந்துள்ளது எனபதை மருத்துவரும் எழுத்தாளருமான திரு.புகழேந்தி எடுத்துரைத்தார். மேலும் காது கேட்பதில் குறைபாடு உடையவர்களின் காது கேட்கும் சக்தியானது மாற்று மருத்துவத்தின் மூலம் அதிகரிக்கும் என்பதையும் கூறினார். 25ந்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். பல்வேறு பிரச்சனைகளைக் கூறி அதற்கான மருத்துவ ஆலோசனைகளையும் இலவச மருந்துகளையும் பெற்றுக் கொண்டனர். இந்தத் திட்டமானது இந்த ஆண்டு முழுவதும் தொடரும் ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் மூன்றாம் ஞாயிற்றுக் கிழமைகளில் மாற்று மருத்துவம் அளிக்கப்படும். இதன் மூலம் இவ்வாண்டு 200 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச மருத்துவ சேவை அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment