AMAZING SPECIES

Tuesday, August 18, 2009

தொலைபேசி வழி - தகவல் அறிவு

தொலைபேசி வழியாக மாற்றுத் திறனாளிகளுக்கு தகவல்களை அளிக்கும் சேவையை மாற்றுத்திறனாளிகளின் வழிகாட்டி திரு.ஜெயகோபால் (கொடீசியா) அவர்கள் துவக்கி வைத்து உரையாற்றினார்.தகவல் தொழில் நுட்பத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பேசினார். சமூக ஆர்வலர் மதுரை திரு.பாலாஜி அவர்கள் கேலிபர் சங்கத்தின் இத் திட்டத்தின் மூலம் தகவல் அறிவு கிடைக்கும். அரசாணைகள் அனைவருக்கும் கிடைக்கச் செய்தல், அனைத்து உரிமைகளை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகியவை இத் திட்டத்தின் நோக்கமாகும். தினமும் ஒரு குறுந்தகவல் அனுப்புவது, அரசு வேலை வைப்புகள் பற்றி தெரிவிப்பது ஆகியவை இந்த சேவையில் அளிக்கப்படும். அனைவரும் பயன் அடைய வேண்டும் என்று பேசினார்.

அனைத்து விதமான வேலை வாய்ப்புகள் பற்றிய தகவலல்களை பெறவும், மாற்றுத்திறனாளிகள் தங்கள் குறைகளை பதிவு செய்யவும் தொலைபேசி வழி தகவல் மையத்தை தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண் 0422-2644603 அலைபேசி 9944556168 காது கேட்பதில் குறைபாடு உடையவர்களுக்கு 9791073540 (SMS only) E Mail: caliber.coimbatore@gmail.com, lalsurya@yahoo.co.in