AMAZING SPECIES

Thursday, January 10, 2008

The Hindu, Tuesday, Jan 29, 2008

Art and craft exhibition
Staff Reporter

COIMBATORE: An exhibition of art and craft work of people with disabilities will be organised by Caliber Trust, an organisation of people with physical disabilities, on February 9 at the Annapoorna Hall at R.S.Puram. The items will be for sale. The proceeds of the sale will go to the welfare activities of the Trust.

The Trust had recently conducted a training programme on art and craft for people with disabilties. The ten people who attended the programme were trained in glass painting, ceramic painting and embossed-cloth painting. For details, contact 0422-2644603 or email caliber.coimbatore @gmail.com.

http://www.hindu.com/2008/01/29/stories/2008012957090200.htm


உடல் ஊனமுற்றோருக்கான இட ஒதுக்கீடு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் விளம்பர எண் 135ல் அறிவிக்கப்படடுள்ள மொத்த காலியிடங்கள் 3875 அதில் உடல் ஊனமுற்றோர்களுக்கு உரிய 3% ஒதுக்கீட்டின்படி 133 இடங்களை ஒதுக்கீடு செய்திருக்க வேண்டும் ஆனால் தட்டச்சர் பணிகளில் 32 இடங்களையும் சுருக்கெழுத்தர் பணிகளில் 6 இடங்களையும் ஒதுக்கியிருக்கிறது தேர்வாணையம். 133 இடங்களுக்கு பதில் 38 இடங்களை மட்டும் உடல் ஊனமுற்றோருக்கு ஒதுக்கினால் ஊனமுற்றோர் என்ற அடிப்படையில் வேலை வழங்கப்பட வேண்டிய 95 இடங்கள் நியாயமாக ஒதுக்கீடு செய்யப்பட வில்லை.95 பேருக்கு அரசு வேலை வாய்ப்பு கிடைக்காமல் போயவிடும். இதற்கு அரசு அளிக்கும் விளக்கம் என்ன? டாஸ்மாக்கில் பணியாற்றி வரும் பணியாளர்களுக்கென சிறப்பு போட்டித் தேவை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது விளம்பர எண் 142 இதில் மொத்த காலிப் பணியிடங்கள் 4103 இதில் உடல் ஊனமுற்றோருக்கு ஒதுக்கப்பட்டிருப்பது வெறும் 32 இடங்களே. 3% இட ஒதுக்கீட்டின்படி உடல் ஊனமுற்றோருக்கு 123 இடங்களை ஒதுக்கியிருக்க வேண்டும். ஆனால் தேர்வாணையம் வெறும் 32 இடங்களை ஒதுக்கீடு செய்து உடல் ஊனமுற்றோரின் வாழ்வாதார உரிமையைப் பறிக்கிறது. அரசு வேலை கிடைக்கும் என்ற நமபிக்கையில் இலட்சக் கணக்கான ஊனமுற்றோர் இருக்கின்றனர். அரசு வேலை என்பது ஒரு சிறப்பு சமூக அந்தஸ்த்து. ஊனமுற்றோரைப் பொறுத்தவரை ஒரு அரசு வேலை இருந்தால் அவர்களுககு எளிதில் திருமணம் நடக்கும். பாதுகாப்பான ஒரு வாழ்க்கை அமையும். உடல் ஊனமுற்றோரின் உரிமைகள் என்பது அடிப்படை மனித உரிமைகள் ஆகும். எனவே அரசு உடல் ஊனமுற்றோருக்கு வழங்க வேண்டிய 3சதவிகித இடஒதுக்கீட்டைப் உடனடியாக வழங்க முன் வர வேண்டும். எனவே அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் நீதிமன்றம் தலையிட்டு உடனடியாக உடல் ஊனமுற்றோருக்கு உரிய இட ஒதுக்கீட்டினைப் பெற்றுத் தர வேண்டும் என்று அனைத்து உடல் ஊனமுற்றோர் சார்பாகக் கேட்டுக் கொள்கிறோம்.