AMAZING SPECIES

Tuesday, July 17, 2012

ACE PROCOMP's HELP TO CALIBER TRUST

மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரு ‍ேமாட்டார் பொறுத்தப்பட்ட வண்டி (மூன்று சக்கர மோட்டார் வண்டி) ஒன்றை வடிவமைக்கும் பணியில் எமது கேலிபர் அறக்கட்டளை ஈடுபட்டுள்ளது. தற்பொழுது சந்தையில் கிடைக்கும் மோட்டார் வண்டிகளை விட விலைக் குறைவாகவும், அரசு இலவசமாக வழங்கும் மூன்று சக்கர சைக்கிளை மாற்றி வடிவமைப்பதன் மூலமாக மாற்றுத்திறனாளிகளின் வேலைக்கு செல்லுதல், சுயதொழில் புரியும் இடங்களுக்குச் செல்வதில் உள்ள இடர்பாடுகளை நீக்க முடியும். இவ்வாறான வண்டியை ஒவ்வொரு மாற்றுத்திறனாளியும் பெற்றிருந்தால் அவர்களின் வேலை வாய்ப்பு அதிகரிக்கும், அவர்களின் வருமானம் அதிகரிக்கும். மேலும் மின்கலத்தினால் இயங்கும் இத்தகைய வண்டி சுற்றுச்சூழலையும் பாதிக்காத வகையில் இருக்கும். முதலில் ஒரு வண்டிய‍ை உருவாக்குவதற்கு சற்றே அதிகமாக செலவு ஆனாலும், பெரிய அளவில் இத்தகைய வண்டிய‍ை உற்பத்தி செய்யும் பொழுது இதன் அடக்கவிலை பெருமளவில் குறையும். ஒரு மாதிரி வண்டியயை உருவாக்க உதவுங்கள்  என்று வேண்டுகோள் விடுத்தோம். எமது கோரிக்கையை ஏற்று பல நல்ல உள்ளங்கள் உதவி வருகின்றன. இந்தத் திட்டத்திற்கு உதவும் அனைவருக்கும் நன்றி.

Sunday, July 1, 2012

UDIS FORUM – CALIBER Free multimedia course for differently abled.

 கேலிபர் பயிற்சி மையத்தில் அனிமேஷன் கலை பயின்ற மாற்றுத்திறனாளிகளில் சிலர் (1-1-2012 முதல் 30-6-2012 வரை)

TNPSC SPECIAL MODEL EXAM FOR HEARING IMPAIRED STUDENTS


செவித்திறன் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகளுக்கு TNPSC Gr-IV  சிறப்பு மாதிரித்தேர்வு 1-7-2012 அன்று கேலிபர் பயிற்சி மையத்தில் நடைபெற்றது. இதில் பத்து பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். 

TNPSC Special coaching for differently abled persons


TNPSC GROUP IV Training for differently abled

Thanks to SHARADHAMANI TRUST

கேலிபர் மாற்றுத்திறனாளிகள் அமைப்பிற்கு நன்கொடை வழங்கிய சாரதாமணி அறக்கட்டளைக்கும் அதன் அறங்காவலர்கள் திரு.எம்.என்.ஜி.மணி அண்ணா அவர்களுக்கும், திருமதி.சாரதா மணி அவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளின் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

TNPSC Model exam for Differently abled persons 17-6-2012



தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தகுதிநிலை நான்கு தேர்வுக்கு கேலிபர் அறக்கட்டளையின் மூலம் ஐம்பது மாற்றுத்திறனாளிள் விண்ணப்பித்தனர். அவர்களுக்கு மூன்று மாத பயிற்சி வழங்கப்பட்டு மாதிரித் தேர்வுகள் நடத்தப்பட்டன.  

Pre employment training for youth 1-4-2012



கேலிபர் பயிற்சி மையத்தால் இந்திய அஞ்சல் துறையில் தற்காலிகப் பணியாளர்களாகப் பணிவாய்ப்புப் பெற்றவர்களுக்கு ஓருநாள் பயிற்சி வழங்குகிறார் சூர்ய.நாகப்பன்